மதுரை

துரித உணவுகளால் இளம் வயதினருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு: மருத்துவர்கள் தகவல்

DIN

துரித வகை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூலம் இளம் வயதினருக்கு நீரிழிவு பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
உலக நீரிழிவு தினம் நவம்பர் 14 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்  நீரிழிவு நோய் நிபுணர்  சி.ஆர். மகேஷ் பாபு, முதுநிலை இருதயவியல்  நிபுணர் ச. கணேசன், சிறுநீரகவியல் நிபுணர் ஆண்ட்ரூ தீபக் ராஜிவ் ஆகியோர் தெரிவித்தது: 
தமிழ்நாட்டில் 14 வயது முதல் 18 வயது வரை உள்ள இளம் வயதினருக்கு உடல் பருமன் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. துரித உணவு கலாச்சாரம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளுதல் போன்றவை நீரிழிவு நோய்க்கு காரணமாக உள்ளன. மனஅழுத்தம் மற்றும் மாற்று உணவு முறைகளால் கணினி பொறியாளர்களிடையே நீரிழிவு நோய் மிக பரவலாக காணப்படுகிறது. இளம் வயது நீரிழிவு நோய்  தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.   மக்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளபோதும், சில நோயாளிகள் மருத்துவரை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சந்திக்கின்றனர். இதை மாற்றிக்கொள்ளவேண்டும். ஏனெனில் நீரிழிவு நோய் இதயம், சிறுநீரகம் மற்றும் கண்களை  பாதிக்கும் தன்மை கொண்டது. மற்றவர்களோடு ஒப்பிடும்போது நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் இறப்பதற்கு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஏற்கெனவே இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தவறாமல் உடற்பயிற்சி செய்தல், வெள்ளை சர்க்கரை மற்றும் வெள்ளை அரிசி, கோதுமை மற்றும் வெள்ளை ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு பாதிப்பை தடுக்க முடியும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16 ஆயிரம் நோயாளிகள் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT