மதுரை

திருப்பரங்குன்றம் கண்மாய்களை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு

DIN

திருப்பரங்குன்றத்தில் கண்மாய்களை கிராம நிர்வாக அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு முதன்மைச் செயலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், மாநகராட்சி ஆணையர் அனீஸ் சேகர் ஆகியோர்  சனிக்கிழமை தென்கால் மற்றும் நிலையூர் கண்மாய்களின் கரைகளைஆய்வு செய்தனர். அப்போது, கண்மாய்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் படி அதிகாரிகளை கண்காணிப்பு  அலுவலர்அறிவுறுத்தினார்.
 பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் மோகன்குமார், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோனா பாய், முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 
இதையடுத்து திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உள்பட்ட தென்கால், மாடக்குளம், நிலையூர் கண்மாய் உள்ளிட்ட  கண்மாய்களை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் பொதுப் பணித்துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT