மதுரை

மதுரை மாநகராட்சி சார்பில் நாகைக்கு ரூ. 8 லட்சம் புயல் நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு

DIN

மதுரை மாநகராட்சி சார்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
கஜா புயல், மழையினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மக்களுக்கு, மதுரை மாநகராட்சி சார்பில், 30 மூடை அரிசி, 175 பிஸ்கட் பண்டல்கள், 2,500 குடிநீர் பாட்டில்கள், 200 போர்வைகள், 200 கைலிகள், 200 துண்டுகள், 200 நைட்டிகள் உள்பட பல்வேறு பொருள்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டன. 
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப. மணிவண்ணன், உதவி ஆணையர் பிரேம்குமார், உதவி ஆணையர் (கணக்கு) சுரேஷ்குமார், மாமன்ற செயலர் ராஜகோபால் உள்பட  மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT