மதுரை

கள்ளழகர் செல்லும் இடத்தை அறிந்து கொள்ள செயலி அறிமுகம்

DIN

அருள்மிகு கள்ளழகர் செல்லும் இடத்தை தெரிந்துக் கொள்ள மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் செயலி செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் வெளியிட்ட செய்தி: 
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மதுரை காவலன் செயலியில் T​R​A​CK AL​A​G​A​R என்ற லிங்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் அருள்மிகு கள்ளழகர், அழகர் கோயிலில் இருந்து புறப்படுவது முதல் எந்த வழியாகச் செல்கிறார் என்பதை செல்லிடப்பேசியில் மதுரை காவலன் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள  T​R​A​CK AL​A​G​A​R என்ற லிங்க் மூலம் வரும் வரை படத்தில் தெரிந்துக் கொள்ளலாம். 
மேலும், கள்ளழகர் புறப்பாடு நிகழ்ச்சிகளை மதுரை காவலன், மதுரை மாவட்ட காவல் யூடியூப் இணையதளத்தில்  தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT