மதுரை

மதுரை நகரில் 4 இடங்களில் நுண் உரம் செயலாக்கத் தொட்டிகள்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

DIN

மதுரை நகரில் குப்பையில் இருந்து நுண்உரம் தயாரிக்கும் செயலாக்கத்தொட்டிகளை முதல்கட்டமாக 4 இடங்களில் வைக்க ஆணையர் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை நகரில் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மக்குபவை, மக்காதவை என தரம் பிரிக்கப்பட்டு குப்பைகள் மூலம் நுண் உரம் தயாரிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு பகுதிகளில் நுண் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக  குப்பைகள் மூலம் நுண் உரம் செயலாக்கத்தொட்டிகள்  மரத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத்தொட்டிகளை மாநகராட்சிஆணையர் ச.விசாகன் புதன்கிழமை பார்வையிட்டார்.
மேலும் முதல் கட்டமாக மாட்டுத்தாவணி காய்கறி வளாகம்,  மேனேந்தல்,  திருப்பாலை உள்ளிட்ட நான்கு இடங்களில் வைக்குமாறும்,  படிப்படியாக நகரின் பல்வேறு இடங்களில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT