ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவையொட்டி, அழகர்கோவில் நூபுரகங்கை தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள், சோலைமலை முருகன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயிலில் வழிபட்டனர்.
அழகர்கோவில் மலை மீதுள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, புனிதநீராடி ராக்காயி அம்மனை வழிபட்டனர். சோலைமலை முருகன் கோயிலில் சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். கள்ளழகர் திருக்கோயிலில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கதவுக்கு சந்தனம் சாத்தி, சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். சுந்தரராஜப் பெருமாளுக்கு பழங்கள் வைத்து, புதுமணத் தம்பதியர் வழிபட்டனர். இதேபோன்று, யானைமலை யோக நரசிம்மர் கோயிலிலும், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலிலும், திருவாதவூர் திருமறைநாதர்-வேதநாயகி அம்மன் கோயிலிலும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.