மதுரை

சட்ட விரோதமாக கிராவல் மண் அள்ளி வந்த 4 லாரிகள் பறிமுதல்

DIN

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த 4 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தியார்குண்டு அருகே வருவாய் ஆய்வாளர் தங்கப்பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் சேதுகந்தவேல் ஆகியோர் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு லாரிகள் கிராவல் மண் ஏற்றிக் கொண்டு வந்தன. அவற்றைப் பிடித்து விசாரித்த போது விருதுநகர் பூசாரிப்பட்டி கண்மாயில் இருந்து மண் ஏற்றி வருவது தெரிய வந்தது. மேலும் மதுரை- தூத்துக்குடி இரண்டாவது ரயில் பாதைக்காக மண் ஏற்றி வருவதாக அதில் இருந்தவர்கள் தெரிவித்தனர். வருவாய் ஆய்வாளர் அதற்கான அனுமதிச் சீட்டை பார்த்தபோது அதில் விருதுநகர் மாவட்டத்துக்குள் கொண்டு செல்ல மட்டுமே  அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் 
செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT