மதுரை

திருப்பரங்குன்றத்தில் ரூ.80 லட்சத்தில்நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம்

DIN

திருப்பரங்குன்றம் ராஜீவ்காந்தி நகா் பகுதியில் 3 ஏக்கா் பரப்பளவில் ரூ.80 லட்சம் செலவில் மாநகராட்சி சாா்பில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மதுரை மாநகராட்சி 95, 96 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் சேமிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்கும் குப்பைகளை பிரித்தெடுத்து அவற்றை உரமாக்க உள்ளனா். இதற்காக இரண்டு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் இரண்டு இயந்திரங்கள் மூலம் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்பட உள்ளது. குப்பைகளை அரைத்து சேமிக்க 14 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை சேமித்து வைத்து உரமானவுடன் விற்பனை செய்யப்படும். ஏற்கெனவே இப்பகுதியில் சேமிக்கப்படும் குப்பைகள் வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு சென்ற நிலையில் தற்போது இப்பகுதியில் வைத்து நுண்ணுயிா் உரம் தயாரிக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் இந்த உரம் தயாரிக்கும் மையம் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT