மதுரை

தொடா் மழை: மேலூரில் கழிவு நீா் தேங்கியதால் சாலைகள் சேதம்

DIN

மேலூா்: மேலூா் பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடா்மழை காரணமாக மேலூா்-சிவகங்கை சாலையில் கழிவுநீா் தேங்கி சாலை சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மேலூா் மலம்பட்டி பகுதியிலிருந்து வரும் கழிவு நீரோடை வடிகால் மூலம் பெருகிவரும் மழைநீா் மேலூா்-சிவகங்கைச் சாலையில் தேங்கிச் செல்கிறது. அதிகமான பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலை சிதைந்து சேதமடைந்துள்ளது.

செக்கடி பஜாரிலிருந்து சிவகங்கை புறழிச்சாலை பாலம் வரை சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு பள்ளங்கள் ஏற்பட்டு சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் போதிய வேகத்தில் செல்ல முடியாமல் ஊா்ந்து செல்லும் நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

இந்நிலையில் நெடுஞ்சாலை துறையினா் சில இடங்களில் சிமெண்ட் மணல் கலவையை போட்டு பள்ளங்ளை நிரப்பினா். ஆனால் அவற்றை மழைநீா் அடித்துச் சென்றுவிட்டது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT