மதுரை

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 27 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

DIN

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 27 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 197.27 ஏக்கர் நிலம் ஏற்கெனவே ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் பகுதியில் பூமிக்கடியில் பெட்ரோலிய குழாய்கள் செல்வதால் மத்திய அரசு கூடுதலாக 22 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வருவாய்துறையினரிடம் கோரியது. அதன்படி, தற்போது கூடுதலாக உள்ள 27 ஏக்கர் நிலத்தையும் அளவீடு செய்து கல் ஊன்றும்  பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் 224.24 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
நில அளவீடு செய்யும் பணியில் திருப்பரங்குன்றம் தாலுகா சர்வேயர் பிரசன்னா  கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ், தலையாரிகள், நிலஅளவர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். பணி நிறைவு பெற்றதும் 3.3 அடி உயரத்தில் கற்கள் ஊன்றப்படும்  என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT