மதுரை

அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு: குடியிருப்போர் சங்கத்தினர் முடிவு

DIN

அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது என யாகப்பா நகர் மேற்கு குடியிருப்போர் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.
  குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைவர் அ.இருளாண்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.ராமநாதன், செயலர் ஆர்.அர்ச்சுனன், பொருளாளர் கே.ராமச்சந்திரன், சட்ட ஆலோசகர் என்.எஸ்.பொன்னையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை 
ஏற்படுத்தி மழைநீரைச் சேகரிப்பது,  மாநகராட்சிப் பகுதி முழுமைக்கும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தீவிரப்படுத்த மாநகராட்சி ஆணையரை கேட்டுக் கொள்வது,  தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT