மதுரை

மாநகராட்சியில் இன்று சிறப்புக் குறைதீர் கூட்டம்

DIN

மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 1 இல் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணைய மற்றும் மண்டல அலுவலங்களில் உதவிஆணையர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர். மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், கட்செவி அஞ்சல், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் மாநகராட்சி மண்டலம் எண் 1 இல் சிறப்பு குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் பங்கேற்று மனுக்களை பெறுகிறார். பொதுமக்கள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் குடிநீர்,  பாதாள சாக்கடை இணைப்பு,  வீட்டு வரி பெயர் மாற்றம்,  புதிய வரி விதித்தல்,  கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT