மதுரை

தமிழகம் முழுவதும் ஆக.1-இல் நலவாரிய அலுவலக முற்றுகைப் போராட்டம்: சிஐடியு

DIN


தொழிலாளர் நலவாரியத் திட்டங்களை முடக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நலவாரிய அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக,  சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர். சிங்காரவேலு  தெரிவித்துள்ளார்.
சிஐடியு மதுரை மாநகர்  மாவட்ட மாநாடு, வில்லாபுரம் லீலாவதி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் ஆர். வாசுதேவன் தலைமை வகித்தார். இம்மாநாட்டை ஆர். சிங்காரவேலு தொடக்கி வைத்துப் பேசினார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:       தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான உதவித் தொகை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நலவாரிய முத்தரப்புக் குழுக்களில் சிஐடியு பிரதிநிதிகளையும்  இடம்பெறச் செய்யவேண்டும். பிற மாநிலங்களில் உள்ளதைப் போல நலவாரிய பணப் பலன்களை உயர்த்த வேண்டும். நலவாரிய உறுப்பினர் பெயர் பிழை திருத்தம், வயது போன்ற காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அதேபோல், உறுப்பினர்களின் பதிவை புதுப்பிக்கவும் மறுக்கப்பட்டு வருகிறது. நலவாரிய உறுப்பினர்கள் ஓய்வூதியம் கோரி விண்ணப்பிக்கும்போது வாரிய அட்டையில் உள்ள வயதை ஏற்க மறுப்பது, விண்ணப்பங்கள் தாமதம் எனக் கூறி நிராகரிப்பதும் தொடர்ந்து வருகிறது.
அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க நலவாரியம் உருவாக்கப்பட்ட நிலையில், அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நலவாரிய அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதில், மாநில துணைத் தலைவர் வி. பிச்சை, மாவட்டச் செயலர் ஆர். தெய்வராஜ்,  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என். நன்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
முன்னதாக மாநாட்டில், மதுரை நகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுப்பது, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுரங்கப் பாதைகள் அமைப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT