மதுரை

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் வெற்றி பெறுவர்

DIN


தமிழகத்தில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் மூலம், இனிவரும் ஆண்டுகளில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் வெற்றி பெறுவர் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  
சென்னையில் இருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டிலேயே இல்லாத அளவுக்கு குயிக் ரெஸ்பான்ஸ் எனக் கூறப்படும்  புதிய பாடத் திட்டம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மாணவர்கள் தங்களுடைய பாடங்களை மடிக்கணினியிலேயே பதிவிறக்கம் செய்து மிக விரைவில் கல்வி கற்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்காக, மலேசியாவிலிருந்து 25 லட்சம் டேப்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்விக்காக புதிய தொலைக்காட்சிகளும் வரவுள்ளன. 
நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சிதான். நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, முன்னாள் மத்திய நிதி அமைச்சரின் துணைவியார் வந்து தமிழகத்துக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளிக்கின்றீர்கள் என வாதாடினார். தற்போது, அவர்கள் மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு, அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை. 
இருப்பினும், நீட் தேர்வுக்காக 413 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்மூலம், கடந்த ஆண்டு 38.37 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 48.39 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  நீட் தேர்வு என்பது சுலபமல்ல. தமிழகத்தில் தற்போது கொண்டுவந்துள்ள பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் விடைத்தாள்கள் இருக்கின்றன.
அடுத்த ஆண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்கள் குறைந்தது ஆயிரம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெறுவர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT