மதுரை

கழுவுடையான் கோயில் கும்பாபிஷேகம்

DIN

உசிலம்பட்டி அருகே தொட்டணம்பட்டி கழுவுடையான் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொட்டணம்பட்டி  கழுவுடையான் கோயிலில் உள்ள  கழுவுடையான், சீலைக்காரி, சீனிவாசப் பெருமாள், கருப்பசாமி மற்றும் 21தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தொடங்கியது.   இந்த விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் 4  கால பூஜைகள் நடைபெற்றன. 
 வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் முடிந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.  யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேத்தை சின்னாளபட்டி கணேசன் சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் செய்தனர். 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT