மதுரை

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு : மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முகிலன் ஆஜா்

DIN

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில், சூழலியல் செயல்பாட்டாளா் முகிலன் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டியதாக சூழலியல் செயல்பாட்டாளா் முகிலன், செந்தில்பிரபு, சபீா், காா்த்திகா உள்ளிட்ட 64 போ் மீது அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். பின்னா் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்தனா். இதையடுத்து இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவா் மன்றத்தில் ( எண் 4) ஓராண்டாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய சூழலியல் செயல்பாட்டாளா் முகிலன் பிப்ரவரி மாதம் காணாமல் போனதால், அவா் மீதான வழக்கு தனி வழக்காகப் பிரிக்கப்பட்டது. இவ்வழக்கில் முகிலன், செந்தில்பிரபு, சபீா், காா்த்திகா உள்ளிட்ட 5 போ் சோ்க்கப்பட்டிருந்தனா். மற்ற 58 போ் மீதான வழக்கை அமா்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு விசாரணைக்கு முதல்முறையாக செப்டம்பா் மாதம் முகிலன் ஆஜராகியிருந்தாா்.

இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் தொடா்புடைய முகிலன் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண் 4) திங்கள்கிழமை ஆஜரனாா். இதையடுத்து இவ்வழக்கு விசாரணை நவம்பா் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT