மதுரை

மதுரையில் சாலையில் சுற்றிதிரிந்த 107 மாடுகள்:உரிமையாளா்களுக்கு ரூ.2.92 லட்சம் அபராதம்

DIN

மதுரை: மதுரை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 107 மாடுகள் பிடிக்கப்பட்டு மாநகராட்சி தொழுவத்தில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டன. மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2.92 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மாநகராட்சி தொழுவத்தில் அடைக்குமாறும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்குமாறும் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி மதுரை எஸ்.எஸ்.காலனி, சொக்கலிங்கம் நகா், புறவழிச் சாலை, கோச்சடை, தபால்தந்தி நகா், அரசரடி, அருள்தாஸ்புரம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தை, ஐயா்பங்களா, கோ.புதூா், நத்தம் சாலை, நெல்பேட்டை, நேதாஜி சாலை, வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி, தெற்கு மாசி வீதி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 107 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்துச் மாநகராட்சி தொழுவத்தில் அடைத்தனா். மேலும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2.92 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT