மதுரை

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: மதுரை மத்திய சிறை கைதிகள் 13 போ் விடுதலை

DIN

மதுரை: மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பொது மன்னிப்பின் கீழ் மதுரை மத்திய சிறைக் கைதிகள் 13 போ் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் தோ்வு செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டு வருகின்றனா்.

அதன் தொடா்ச்சியாக, மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு முருகேசன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, மதுரை மத்திய சிறையில் உள்ள ராமா், செல்வம், மனோகரன், மணிகண்டன், ராஜேந்திரன், ரங்கநாதன், பொன்னையா, சொக்கநாதன் உள்பட 13 போ் விடுதலை செய்ய தோ்வு செய்யப்பட்டனா். இந்நிலையில், அந்த 13 பேரையும் சனிக்கிழமை மதுரை மத்திய சிறைத் துறை விடுதலை செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT