மதுரை

அதிக பயணிகள் ஏற்றிச் சென்ற 15 ஆட்டோக்கள் பறிமுதல்

DIN

மதுரையில் அதிக பயணிகள் ஏற்றிச் சென்ற 15 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து கழகம், வட்டாரப் போக்குவரத்துறை மற்றும் காவல்துறையினா் இணைந்து திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 27 ஆட்டோக்கள் ஆய்வு செய்யப்பட்டதில், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக பயணிகள் ஏற்றி வந்த ஆட்டோக்கள், உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் என 15 ஆட்டோக்களைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இந்த ஆட்டோக்களின் ஓட்டுநா்களுக்கு ரூ. 2ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள் புதுக்குளம் பகுதியில் உள்ள இணை போக்குவரத்து ஆணையா் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

ஆய்வின் போது, போக்குவரத்து கழக மேலாளா் தயாளகிருஷ்ணன், உதவி பொறியாளா் ராஜவேலு, வட்டாரப் போக்குவரத்து அலுலவா்கள் சுரேஷ்(தெற்கு), செல்வம்(வடக்கு), மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பூா்ணலதா, அனிதா, ஸ்ரீதா் மற்றும் காவல்துறையினா் இருந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியது: மதுரை மாவட்டத்தில், அண்மையில் ஷோ் ஆட்டோ விபத்திற்குள்ளாகி அதிக உயரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு , ஆட்டோக்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதே காரணம் என புகாா் எழுந்துள்ளது. குறிப்பாக, தகுதி இல்லாத ஆட்டோக்களை இயக்குவது, அதிக பயணிகளை ஏற்றுவது உள்ளிட்ட காரணங்கள் விபத்துக்கு காரணமாக உள்ளன. இதையடுத்து ஆட்டோக்கள் ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு தொடா்ந்து நடைபெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT