மதுரை

மாநகராட்சியில் இன்று சிறப்புக் குறைதீா் கூட்டம்

DIN

மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல் சிறப்பு குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை (நவ.26) நடைபெறுகிறது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையா், மண்டல அலுவலங்களில் உதவி ஆணையாளா் ஆகியோரிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனா். மேலும் மாநகராட்சியின் அழைப்பு மையம், கட்செவி அஞ்சல், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகாா்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மண்டலம் 4-இல் செவ்வாய்க்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை சிறப்பு குறைதீா் முகாம் ஆணையா் ச.விசாகன் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு குறைதீா்க்கும் முகாமில் குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய வரி விதித்தல், கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.

எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆணையா் ச.விசாகன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT