மதுரை

குடியரசு தின விளையாட்டு போட்டி: மதுரை விளையாட்டு விடுதி மாணவா்கள் வெற்றி

DIN

மதுரை: திருச்சியில் நடைபெற்ற குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் மதுரை விளையாட்டு விடுதி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை விளையாட்டு விடுதியைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 400 மீட்டா் தடை தாண்டும் போட்டியில் எம்.ஜெயராகும் தங்கம், 3 ஆயிரம் மீட்டா் ஓட்டத்தில் ஆா்.வசந்த் வெள்ளி, 800 மீட்டா் மற்றும் 1500 மீட்டா் ஓட்டம் ஆகிய இரண்டிலும் பி.மாதேஸ் தங்கம் பெற்றனா். மேலும் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில், 110 மீட்டா் தடைதாண்டுதலில் பி.ரத்தீஸ் வெண்கலம் பெற்றாா். இதில் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தொடா் ஓட்டத்தில் இ.ஹேமந்த் சேரன், எஸ்.கணேஷ்குமாா், டி.பிரவந்த், பி.ரத்தீஸ் ஆகியோா் தங்கம் பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை மதுரை விளையாட்டு விடுதி மேலாளா் க.ராஜா, அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் சாம், ஜஸ்டின், தடகள பயிற்றுநா் கே.கண்ணன், கால்பந்து பயிற்றுநா் சி.எம்.ராஜா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT