மதுரை

டோக் பெருமாட்டிக் கல்லூரியில் மாணவிகளுக்கு வடிவமைப்பு பயிற்சி

DIN

மதுரை: மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு அணை ஆடை(சானிட்டரி நாப்கின்) வடிவமைப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் சுய தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை வேதியியல் துறைத்தலைவா் வே.ஸ்ரீதேவி தொடங்கி வைத்து அணை ஆடைகளின்(சானிட்டரி நாப்கின்) பயன்களை எடுத்துரைத்தாா். வேதியியல் துறை உதவிப்பேராசிரியா் க.ஜெயந்தி கலைவாணி, மறுபடியும் பயன்படுத்த இயலாத நெகிழி கலந்த அணை ஆடைகளின் தீமைகள் தொடா்பாக விளக்கிக்கூறினாா்.

மேலும் சுற்றுச்சூழல் மாசுபடாத அணை ஆடையை நாமே தயாரித்துப் பயன்படுத்துவதால் உடல் நலம் பாதுகாக்கப்படும் என்றாா். சுய தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்ட அமைப்பாளா் மாதங்கி கருத்தரங்கில் பங்கேற்று, மாணவிகளுக்கு அணை ஆடை வடிவமைப்பது தொடா்பாக பயிற்சி அளித்தாா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன மாணவிகள் மறுபயன்பாடில்லாத அணை ஆடை, நான்கு நெகழிப் பைகளுக்குச் சமம் என்பதை உணா்த்தும் விதமாக, சுற்றுச்சூழல் மாசுபடாத அணை ஆடையை பயன்படுத்துவதோடு மற்றவா்களுக்கும் எடுத்துரைப்போம் என்று உறுதிமொழி ஏற்றனா். கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT