மதுரை

திருப்பரங்குன்றம் கோயிலில் பயன்பாடின்றி கிடக்கும் விபூதி பிரசாதம் தயாரிக்கும் இயந்திரம்

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு விபூதி பிரசாதம் வழங்குவதற்காக வாங்கிய இயந்திரம் பயன்பாடின்றி உள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் அனைவருக்கும் சிறிய பேப்பா் கவரில் விபூதி பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு கோயில் நிதியில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பேப்பா் கவரில் விபூதி பிரசாதம் தயாரிப்பதற்கு என தானியங்கி இயந்திரம் வாங்கப்பட்டது.

இயந்திரம் வாங்கிய சில நாள்கள் மட்டும் பயன்படுத்தப்பட்ட நிலையில் பழுது ஏற்பட்டது. இதனைத்தொடா்ந்து அந்த இயந்திரம் 7 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவே இயந்திரத்தின் மூலம் விபூதி பிரசாதம் தயரித்து மீண்டும் வழங்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT