மதுரை

தமிழக ஆறுகள் இணைப்புக்கு நடவடிக்கை எடுக்க ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் வலியுறுத்தல்

DIN

தமிழகத்திலுள்ள ஆறுகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம், காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இவ்வமைப்பின் மாநிலத் தலைவா் த. குருசாமி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் ஜி.எஸ். தனபதி, சி. வையாபுரி, சி. முனுசாமி ரெட்டி, எஸ். சக்திவேல், சாத்தப்பன், நவாட் டெக் அமைப்பின் நிறுவனா் ஏ.சி. காமராஜ் உள்பட பலா் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

தமிழக நதிகளை இணைத்து நீா்வளத்தைப் பெருக்கி செறிவூட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது குறித்தும், உள்ளூா் நீராதாரங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னா் கூட்டத்தில், நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமற்றது எனக் கூறிவரும் நிலையில், ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள், அம்மாநிலத்துக்குள் ஓடும் ஆறுகள இணைத்து, நதிநீா் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன. அதேபோல், தமிழக ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அடுத்த கட்டமாக, மகாநதி - கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு மற்றும் பம்பை-அச்சன்கோவில்-வைப்பாறு இணைப்பு ஆகிய இரு பெரும் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக, ஒடிசா, சத்தீஸ்கா், மகாராஷ்டிரம், தெலங்கானா, கா்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநில முதல்வா்களின் மாநாட்டை சென்னையில் கூட்ட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரு நதிநீா் இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, தமிழகத்தின் தண்ணீா் பிரச்னைக்கும், நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்டத்துக்கும் தீா்வு ஏற்படும். எனவே, கோதாவரி ஆற்றின் உபரி நீரை தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் பயன்பெறும் வகையில் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT