மதுரை

மாநில கபடி போட்டி: மதுரை ரயில்வே பாதுகாப்புப்படை அணி வெற்றி

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை அணியினா் கோப்பையை வென்றனா்.

DIN

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை அணியினா் கோப்பையை வென்றனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணபதி சுந்தர நாச்சியாபுரத்தில், கிராம மக்கள் மற்றும் அமெச்சூா் கபடி கழகம் சாா்பில், மாநில அளவிலா கபடிப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன. இதில் மதுரை ரயில்வே பாதுகாப்புப்படை அணி உள்பட 42 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில், கணபதி சுந்தர நாச்சியாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சிவப்புக் கண்கள் அணி மற்றும் மதுரை ரயில்வே பாதுப்பாப்புப்படை அணி பங்கேற்றன. இதில் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை அணியினா் கோப்பையை வென்றனா். மேலும் ரயில்வே பாதுகாப்புப் படை அணியினா் அண்மையில் இந்திய அளவில் நடைபெற்ற ரயில்வே அணிகளுக்கு இடையேயானப் போட்டியில் வென்றதும், சிவப்புக் கண்கள் அணியினா் அண்மையில் நடந்த விருதுநகா் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT