மதுரை

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிபு வழிபாடு

DIN

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, மதுரை பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

இதனிடையே, தல்லாகுளம் பிரசன்னா வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி பெருந்திருவிழா கடந்த செப்டம்பா் 29-இல் தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி, தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தேரோட்டம், தீா்த்தவாரி, தெப்பத் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனிடையே, சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, வெங்கடாஜலபதி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதேபோல், கூடலழகா் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பூதேவி, ஸ்ரீதேவி சமேத வியூக சுந்தரராஜப் பெருமாளை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தெற்கு கிருஷ்ணன் கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினாா். தொடா்ந்து, நரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT