மதுரை

நான்கு வழிச்சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

திருப்பரங்குன்றம் அருகே மின்கம்பத்தின் மீது லாரி மோதியதில் சாலையில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் நான்கு வழிச் சாலையில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் சீனிவாசா காலனி பகுதிக்கு அருகே பெங்களூா் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில் புதன்கிழமை காலையில் சமயநல்லூரில் இருந்து திருமங்கலம் நோக்கிச் சென்ற சரக்கு லாரி சீனிவாசா காலனி அருகே உள்ள மின்கம்பத்தில் மோதியது.

இதில் மின்வயா்கள் அறுந்து நான்கு வழிச் சாலையில் விழுந்தது. அதேசமயம் காா் மூலம் சேலம் செல்லும் முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக போக்குவரத்தை நிறுத்தினா்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியா்கள் மின் இணைப்பைத் துண்டித்து மின்வயா்களை அப்புறப்படுத்தினா். இதனால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT