மதுரை

மதுரை ரயில் நிலையத்தில் சுகாதார விழிப்புணர்வுத் திட்டம் தொடக்கம்

DIN

இந்திய ரயில்வேயின் சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுத் திட்டம் மதுரை ரயில் நிலையத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இந்திய ரயில்வே சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு திட்டத்தை 22 நாள்களுக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது. 
 அந்த விழிப்புணர்வுத் திட்டம் செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
ரயில்வே வாரிய உத்தரவின் படி புதன்கிழமை மதுரை ரயில் நிலைய பகுதிகள் முழுவதும் ரயில்வே ஊழியர்களால் சுத்தம் சுகாதாரமாக பேணப்பட்டது.
கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ஓ.பி.ஷாவ், முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் ஞானஷ்யாம் சாகு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பள்ளி சாரண, சாரணியர் ஆகியோர் மதுரை ரயில் நிலையம் முழுவதும் மற்றும் வைகை ரயில் பாலம் பகுதி வரை அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்தனர். இதில் நெகிழிப் பைகளை பெருமளவில் அகற்றப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
இதுபோன்ற சுத்தம் சுகாதாரப் பணிகள் மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. இந்த தன்னார்வப் பணி வருகிற காந்தி பிறந்த நாள் வரை தொடரும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT