மதுரை

முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 1,827 பேர் பங்கேற்பு

DIN


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வரும் முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் சனிக்கிழமை 1,827 பேர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களைப் பூர்த்தி செய்வதற்கான எழுத்துத் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இத்தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, 3 நாள்களுக்கு பாடவாரியாக இணைய வழியில் நடத்தப்படுகிறது.
இதற்கென, மதுரை மாவட்டத்தில் 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை ஆங்கிலம் தேர்வு நடைபெற்றது. இத் தேர்வுக்கு 1,166 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 882 பேர் தேர்வெழுதினர். 284 பேர் தேர்வுக்கு வரவில்லை.
அதேபோல், சனிக்கிழமை பிற்பகலில் வணிகவியல், வேதியியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த பாடங்களுக்கு மொத்தம் 1,166 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 945 பேர் தேர்வெழுதினர். 221 பேர் தேர்வுக்கு வரவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT