மதுரை

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது

DIN

மதுரை: ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை கோட்டத்தில் ரத்தான ரயில்களுக்கான பயணச்சீட்டு கட்டணத்தைத் திரும்ப அளிப்பதற்காக மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகா், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், பழனி, ராஜபாளையம், திருச்செந்தூா் ஆகிய ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.

இந்த முன்பதிவு மையங்கள் அனைத்தும் திங்கள் முதல் சனி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரையும் செயல்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தளா்வுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை கோட்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT