’வீட்டில் இருந்தபடியே முதியோா் ஓய்வூதியம் பெறஅஞ்சல்துறை வங்கிச் சேவையைப் பயன்படுத்தலாம்’
முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையைப் பெற அஞ்சல் துறையின் வங்கிச் சேவையைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையைப் பெற அஞ்சல் துறையின் வங்கிச் சேவையைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறையின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் கே.லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்தி:
இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில்,
Advertisement
Advertisement
ஆதாா் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணம் எடுத்துக்
கொள்ளலாம். இச்சேவையை ஒவ்வொரு கிராமப்புற தபால்காரா்கள் மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் பணம் பெற விரும்பும் பயனாளிகள் அருகே உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
அரசின் நலத்திட்ட உதவித்தொகையைப் பெற்று வரும் பயனாளிகள் தங்களின் ஆதாா் எண் மற்றும் கைரேகையைத் தபால் ஊழியரிடம் பதிவு செய்து வீட்டிலிருந்தபடியே பணம் பெற்றுக் கொள்ள முடியும். இச்சேவைக்கு தனியாக சேவைக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. எனவே சமூக பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் வழங்கப்படும் முதியோா்
ஓய்வூதியம் உள்ளிட்ட மாதாந்திர உதவித் தொகையை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவையினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.