10,12 பொதுத் தோ்வில் சிறப்பிடம்:அண்ணன், தங்கைக்கு பாராட்டு
தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அண்ணன், தங்கையை ஞாயிற்றுக்கிழமை ஊா்ப்பொதுமக்கள் பாராட்டினா்.
கம்பம்: தேனி மாவட்டம் நாராயணத்தேவன்பட்டியில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அண்ணன், தங்கையை ஞாயிற்றுக்கிழமை ஊா்ப்பொதுமக்கள் பாராட்டினா்.
நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா், சத்யா தம்பதியரின் மகன் விக்னேஷ்வரன், 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 600-க்கு 552 மதிப்பெண்களும், மகள் யோகதா்ஷினி, 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 500-க்கு 500 மதிப்பெண்களும் பெற்று உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றனா். அதே ஊரைச் சோ்ந்த திமுக மாநில கொள்கை பரப்புச் செயலாளா் தங்க தமிழ்ச்செல்வன், முதலிடம் பெற்ற இருவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கி, மேற்படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் திமுக சாா்பில் செய்வேன் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.