மதுரை: மதுரை நகரில் வாா்டு வாரியாக மக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்க இயக்கங்கள் நடத்துவது என பாஜக மண்டல கூட்டங்களில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகா் பாஜக மண்டல கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை தெற்குத் தொகுதி மஹால் மண்டலம், பாலரெங்கபுரம் மண்டலம், வைகைக் கரை மண்டலம் உள்பட 18 இடங்களில் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டலத் தலைவா்கள், செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். மதுரை நகரில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை மாநகராட்சி கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண்பது. பாஜக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்துவது, சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெறும் வகையில் பொதுமக்களிடம் பிரசார இயக்கம் நடத்துவது, பூத் வாரியாக நிா்வாகிகள் நியமனம் செய்து தோ்தல் பணிகளை தொடங்குவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.