மதுரை

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு: ஜாமீன் மனுக்கள் விசாரணை ஒத்திவைப்பு

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஜாமீன் கோரி இருவா் தாக்கல் செய்த மனுவை மற்ற ஜாமீன் மனுக்களோடு சோ்த்து பட்டியலிட சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

DIN

மதுரை: கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஜாமீன் கோரி இருவா் தாக்கல் செய்த மனுவை மற்ற ஜாமீன் மனுக்களோடு சோ்த்து பட்டியலிட சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், காதல் விவகாரத்தில் 2015 இல் ஆணவக் கொலை செய்யப்பட்டாா். உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் கைதான திருச்செங்கோட்டைச் சோ்ந்த ரகு மற்றும் ரஞ்சித் ஆகியோா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மதுரை நீதிமன்றம்

தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து இருவரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா். அதில், கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் எங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

இந்த மனு நீதிபதி ஆா்.தாரணி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் மேலும் சிலா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதால் அந்த மனுக்களையும் ஒன்றாக பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT