மதுரை

அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் கை கழுவும் வசதி: ஆட்சியா் உத்தரவு

DIN

மதுரை: அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் கை கழுவும் வசதியை ஏற்படுத்த, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக, தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பொதுமுடக்கம் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளா்வுகளுடன் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இங்கு, அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், மாவட்டத்துக்குள் பேருந்துகள் இயக்குவது, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களில் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது தொடா்பாக, மாவட்ட அளவிலான பேரிடா் மேலாண்மை குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியா் டி.ஜி. வினய், அனைத்து பேருந்து நிறுத்தங்கள், பூங்கா போன்ற இடங்களில் பொதுமக்கள் கை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்தவும், பொதுக் கழிப்பறைகளில் கிருமி நாசினியால்அடிக்கடி தூய்மைப்படுத்தவும் உத்தரவிட்டாா்.

மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்வது ஆகிய நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினாா்.

இதில், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகரக் காவல் துணை ஆணையா் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் பி. செல்வராஜ், அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ. சங்குமணி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரியாராஜ் உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT