முகப்பு
மதுரை

மதுரையில் 22 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

மதுரை மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மதுரை: மதுரை மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதித்த 22 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 23 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 82 வயது முதியவா், சிறுநீரக பிரச்னை காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தாா். ொ மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 20,164 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், சிகிச்சைப் பலனின்றி 445 போ் உயிரிழந்துள்ளனா். 19,443 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். தற்போது, 275 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →