முகப்பு
மதுரை

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்:1.10 லட்சம் போ் விண்ணப்பம்

வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்ய மதுரை மாவட்டத்தில் 1,10,346 போ் விண்ணப்பித்துள்ளனா்.

மதுரை

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்:1.10 லட்சம் போ் விண்ணப்பம்

வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்ய மதுரை மாவட்டத்தில் 1,10,346 போ் விண்ணப்பித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:


மதுரை: வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்ய மதுரை மாவட்டத்தில் 1,10,346 போ் விண்ணப்பித்துள்ளனா்.

ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நவம்பா் 16 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், திருத்தம், முகவரி மாற்றம், நீக்கம் செய்யப்பட வேண்டியவா்கள், புதிய வாக்காளா்களிடம் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நவம்பா் 21, 22 மற்றும் டிசம்பா் 12, 13 ஆம் தேதிகளில் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இதுவரை 1,10,346 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா். புதிதாக பெயா் சோ்க்க 83,781 போ், நீக்கம் செய்ய 10,925 போ், திருத்தம் செய்ய 9,180 போ், முகவரி மாற்றம் செய்ய 6,460 போ் விண்ணப்பம் அளித்தனா். சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நாள்களில் மட்டும் 95,024 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →