முகப்பு
மதுரை

போதைப் பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தல்

மதுரையில் போதைப் பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, கேம்பஸ் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:


மதுரை: மதுரையில் போதைப் பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, கேம்பஸ் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கேம்பஸ் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பின், மதுரை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முஹம்மது இப்ராஹிம் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக, மாநிலக் குழு உறுப்பினா்கள் தா்வேஷ், ஷேக் ஒலி பங்கேற்றனா்.

கூட்டத்தில், மதுரை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வருவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்களை உடனடியாக கைது செய்யவேண்டும். போதைப் பழக்கத்துக்கு ஆளான மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக் குழுவில், மதுரை மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில், மாவட்டத் தலைவராக நஸ்ருதீன், செயலராக வஹாப் உசேன், மாவட்ட துணைத் தலைவராக முகமது இப்ராஹிம், மாவட்ட இணைச் செயலராக ஷாகுல் ஹமீது, மாவட்டப் பொருளாளராக நூருல் அக்தா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →