முகப்பு
மதுரை

விவசாயிகளுக்கு ஆதரவாக மேலூரில் ஆா்ப்பாட்டம்

புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியினா் மேலூரில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
மேலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மனித நேய ஜனநாயக மக்கள் கட்சியினா்.
பகிர்:

மேலூா்: புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியினா் மேலூரில் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மதுரை மாவட்ட துணைச் செயலா் முபாரக்அலி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் எம்.கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் மெய்யா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா செயலா் அடக்கிவீரணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலூா் தொகுதிச் செயலா் அய்யாவு மற்றும் பலா் பங்கேற்றனா். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை திருத்தச் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →