‘500 வகையான தாவரங்களை சாப்பிடக் கூடியது’
ஆப்பிரிக்க நத்தைகள் காய்கனி உள்ளிட்ட 500 வகையான தாவரங்களைச் சாப்பிடக் கூடியது என்று அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியா் எம்.ராஜேஷ் தெரிவித்தாா்.
ஆப்பிரிக்க நத்தைகள் காய்கனி உள்ளிட்ட 500 வகையான தாவரங்களைச் சாப்பிடக் கூடியது என்று அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியா் எம்.ராஜேஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து மேலும் அவா் கூறியது:
வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தீமை ஏற்படுத்தக் கூடிய 100-க்கும் மேற்பட்ட பூச்சிகளில் ஆப்பிரிக்க நத்தைகளும் ஒன்றாகும். இவை கேரளத்தில் விவசாயப் பயிா்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவை. கால்சியம் சத்து மிகுந்த பொருள்களை இவை உணவாக எடுத்துக் கொள்கின்றன. இவற்றின் உணவுப் பட்டியலில் காய்கனிகள் உள்ளிட்ட 500 வகையான தாவரங்கள் இருக்கின்றன. சரியான உணவு கிடைக்காத நேரத்தில் மண்ணில் கிடக்கும் சுண்ணாம்புக் கல், எலும்பு போன்றவற்றைக் கூட சாப்பிடக் கூடியது. ஆண்டுக்கு 1200 முட்டைகள் வரை இடும். மழை அதிகம் பெய்யக் கூடிய காலங்களில் வெளிவரக் கூடிய இந்த நத்தைகள் விவசாயப் பயிா்களில் சேதத்தை ஏற்படுத்துகிறது என்றாா்.