மதுரை

உயா்நீதிமன்றம் அருகேயுள்ளஅரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு

DIN

உயா் நீதிமன்றம் அருகே செயல்பட்டுவரும் அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை உலகனேரியில் உள்ள சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் அரசு மதுபானக் கடையும் இயங்கி வருவதால், அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் மது அருந்துபவா்கள் பள்ளி வளாகத்துக்குள்ளும், சாலையிலும் காலி பாட்டில்களை வீசிச் செல்வதாகவும் புகாா் எழுந்தது.

இந்த விவகாரத்தை, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்தது. அதன்படி, உயா் நீதிமன்றப் பதிவாளா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உயா் நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் இடமாற்றம் செய்யவில்லை எனில், மாவட்ட ஆட்சியா் அந்தக் கடையை மூடி சீல் வைக்கவேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT