மதுரை

தைப்பூசத் திருவிழா: பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் காலை 11.45 மணிக்கு பழனி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பழனி ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் இரவு 10.15 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வரும்.

கோயம்புத்தூா் - பழனி பயணிகள் சிறப்பு ரயில் கோயம்புத்தூா் ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 2 முதல் 12 ஆம் தேதி வரை காலை 9.45 மணிக்கு புறப்பட்டு பகல் 12.45 மணிக்கு பழனி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பழனி ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் முதல் 12 ஆம் தேதி வரை பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கோவை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

SCROLL FOR NEXT