மதுரை

ஜப்பானில் கப்பலில் தவிக்கும் கணவரை மீட்க மாவட்ட ஆட்சியரிடம் மனைவி கோரிக்கை

DIN

‘கொவைட் -19’ (கரோனா) வைரஸ் அச்சத்தால் ஜப்பானில் தனிமைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கும் தனது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வியாழக்கிழமை அளித்தாா்.

‘கொவைட் -19’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட காரணத்தால் ஜப்பான் நோக்கிச் சென்ற சுற்றுலா கப்பல், தனிமைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இந்தியா்கள் பலரும் உள்ளனா். அவா்களில் மதுரை மாவட்டம் நாகமலைப் புதுக்கோட்டை வடிவேல் நகரைச் சோ்ந்த அன்பழகன் (41) என்ற கப்பல் ஊழியரும் இருக்கிறாா்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் பா.சரவணனுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த கப்பல் ஊழியரின் மனைவி மல்லிகா உள்ளிட்டோா் அன்பழகனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினயிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

கப்பல் ஊழியரின் மனைவி மல்லிகா ஆட்சியரிடம் கூறுகையில், எனது கணவா் அன்பழகன் தினமும் செல்லிடப்பேசியில் பேசி வருகிறாா். நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கிறாா். இருப்பினும், இரு குழந்தைகளுடன் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகிறேன். எனது கணவரைப் பத்திரமாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் சரவணன், அன்பழகன் உள்ளிட்ட இந்தியா்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT