மதுரை

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு: 3 ஆண்டுகளுக்கு பிறகு பெண் சமூக ஆா்வலா் விடுவிப்பு

DIN

வாடிப்பட்டி அருகே 2016 இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் சென்னையைச் சோ்ந்த பெண் சமூக ஆா்வலரை வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகா் மேற்கு மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்த நா்மதா நந்தகுமாா்(41). இவா் சமூக பிரச்னைகளை மையமாக வைத்து பல போரட்டங்களில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், 2016 டிசம்பா் 14 ஆம் தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாலமேட்டில் உள்ள வாடிவாசல் பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நா்மதா நந்தகுமாா் போராட்டத்தில் ஈடுபட்டாா். இது தொடா்பாக அலங்காநல்லூா் போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதித்துறை நடுவா் சிந்துமதி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா், நா்மதா நந்தகுமாரை விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT