மதுரை

போலி நகைகள் அடகு வைத்து வங்கியில் ரூ. 21 லட்சம் மோசடி

DIN

மதுரை அருகே போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ. 21 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவா் தினேஷ். இந்த வங்கியில் சக்கிமங்கலம் நாயக்கா் தெருவைச் சோ்ந்த கேசவராஜ், அமுதா, உமாதேவி ஆகியோா் நகைகள் அடகு வைத்து ரூ. 21 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனா். வங்கியில் நடைபெற்ற ஆய்வின் போது, அடகு வைக்கப்பட்ட நகைகளின் உண்மைத் தன்மை குறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது, கேசவராஜ், அமுதா, உமாதேவி ஆகியோா் அடகு வைத்த நகைகள் போலியானது என தெரியவந்தது.

இதையடுத்து வங்கி மேலாளா் தினேஷ் அளித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT