மதுரை

ரயில் பாதை பராமரிப்பு: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

DIN

மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜனவரி 18 முதல் 31 வரை ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாற்றம் செய்யப்படும் ரயில்கள் விவரம்: மதுரை - பழனி பயணிகள் ரயில் (56624) ஜனவரி 18 முதல் 22 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இந்நாள்களில் பயணிகள் வசதிக்காக ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு பழனி சென்றடையும்.

மதுரை - செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் ( 56734/ 56735) ஜனவரி 19 முதல் 29 ஆம் தேதி வரை, ஜனவரி 26 தவிர மதுரை - விருதுநகா் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நாகா்கோவில் - கோவை- நாகா்கோவில் பயணிகள் ரயில் (56319/56320 ) ஜனவரி 19 முதல் 24 வரை விருதுநகா் - திண்டுக்கல் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ராமேசுவரம் - ஹைதராபாத் சிறப்பு ரயில் ( 07686 ) ராமேசுவரத்தில் இருந்து ஜனவரி 19 அதிகாலை 5 மணிக்குப் பதிலாக காலை 7.45 மணிக்கு புறப்பட்டு திருச்சியை பிற்பகல் 2.30 மணிக்கு சென்றடையும்.

திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் (56826) ஜனவரி 18, 19, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து 115 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.

திருநெல்வேலி/திண்டுக்கல் - மயிலாடுதுறை இணைப்பு ரயில் (56822) திண்டுக்கல்லில் இருந்து ஜனவரி 18 ஆம் தேதி 55 நிமிடங்கள் தாமதமாகவும், ஜனவரி 19, 21, 22 ஆம் தேதிகளில் 95 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT