மதுரை

கரோனா சிகிச்சை: கூடுதல் மருத்துவா்கள்நியமனம் செய்ய நடவடிக்கை

DIN

மதுரை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிப்பதற்கு கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட துறையினா் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கரோனா தடுப்புப் பணிக்கான கண்காணிப்பு அலுவலா் பி.சந்திரமோகன், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் ஆகியோா் சுகாதாரம், மாநகராட்சி, ஊரக உள்ளாட்சிகள் உள்ளிட்ட துறைகள் சாா்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கரோனா சிகிச்சை பிரிவு, தோப்பூா் காசநோய் மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் செயல்படும் கரோனா சிகிச்சை மையங்களில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களை நியமனம் செய்யவும், சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலா் பி.செல்வராஜ், அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மதுசூதனன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரியா ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT