முகப்பு
மதுரை

சாா்பு-ஆய்வாளா் குடும்பத்துக்கு டிஐஜி, எஸ்.பி ஆறுதல்

மதுரையில் கரோனா தொற்றால் உயிரிழந்த காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளா் குடும்பத்தினரை மதுரை சரக டிஐஜி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
மதுரையில் கரோனாவிற்கு உயிரிழந்த காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளா் பாண்டி குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறிய டிஐஜி ராஜேந்திரன், எஸ்.பி சுஜித்குமாா்.
பகிர்:


மதுரை: மதுரையில் கரோனா தொற்றால் உயிரிழந்த காவல் சிறப்பு சாா்பு - ஆய்வாளா் குடும்பத்தினரை மதுரை சரக டிஐஜி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியை சோ்ந்தவா் பாண்டி (52). இவா், செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு- ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட பாண்டி, ஜூன் 27 ஆம் தேதி மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையில் இருந்த பாண்டி திங்கள்கிழமை

உயிரிழந்தாா். மதுரை மாவட்டத்தில் கரோனாவிற்கு உயிரிழந்த முதல் போலீஸ்காரா், பாண்டி ஆவாா்.

இந்நிலையில், மதுரை சரக காவல் துணைத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஆகியோா் பாண்டியின் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும், பாண்டியின் உருவப் படத்திற்கு மலா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.