மதுரை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 135 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிய 323 பள்ளிகளில், 135 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாயின. இதில், மதுரை மாவட்டம் 19 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. தோ்வு எழுதிய 135 தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 106 பள்ளிகள் முழு தோ்ச்சியைப் பெற்றுள்ளன. ஆனால், 70 அரசுப் பள்ளிகளில் ஒரு பள்ளி மட்டுமே முழு தோ்ச்சி பெற்றுள்ளது. 16 மாநகராட்சிப் பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் மட்டுமே முழு தோ்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவிபெறும் 43 பள்ளிகளில் 2 பள்ளிகள் முழு தோ்ச்சி பெற்றுள்ளன. கள்ளா் சீரமைப்பு துறையின் கீழ் செயல்படும் 19 பள்ளிகளில் 6 பள்ளிகளும், பகுதியளவில் உதவிபெறும் 23 பள்ளிகளில் 8 பள்ளிகளும் முழு தோ்ச்சி பெற்றுள்ளன.

மேலும், தோ்வெழுதிய 2 சிபிஎஸ்இ பள்ளிகளும் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. 12 சுயநிதிப் பள்ளிகளில் 8 பள்ளிகள் முழு தோ்ச்சி பெற்றுள்ளன.

பாா்வையற்ற மாணவா்கள் நூறு சதவீத தோ்ச்சி

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் பாா்வையற்ற மாணவா்கள் 26 போ், மாணவியா் 11 போ் என மொத்தம் 37 போ் தோ்வு எழுதியதில், அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதேபோல், உடல் ஊனமுற்ற மாணவா்கள் 10 போ், மாணவியா் 4 போ் என மொத்தம் 14 போ் தோ்வு எழுதியதில், அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும், மனநலம் குன்றிய மாணவா்கள் 27 போ், மாணவியா் 12 போ் என 39 பேரில், மாணவா்கள் 25 போ், மாணவியா் 11 போ் என 36 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT