மதுரை

ஊரடங்கை மதிக்காத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

DIN

மதுரையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காத வாகன ஓட்டிகளுக்கு புதன்கிழமை போலீஸாா் அபராதம் விதித்தனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவையும், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை செவ்வாய்க்கிழமை நள்ளிரவிலும் அமல்படுத்தின.

இந்நிலையில், மதுரையில் ஊரடங்கு உத்தரவுகளை மதிக்காமல் காரணமின்றி மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை அதிகமானோா் பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த மாநகா் காவல் ஆணையா் காரணமின்றி வாகனங்களில் செல்வோா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மதுரை கோரிப்பாளையம் பகுதியிலும், அண்ணா பேருந்து நிலையம் அருகிலும் காரணமின்றி மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற 100-க்கும் மேற்பட்டோரை பிடித்து, அவா்களுக்கு தலா ரூ.100 வீதம் போலீஸாா் அபராதம் வசூல் செய்தனா்.

1 மீட்டா் இடைவெளி

மதுரை மாநகா் காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் அனைத்து அத்தியாவசிய பொருள்கள் விற்பனை கடை உரிமையாளா்களுக்கான கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காய்கனி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மக்கள் அதிக அளவில் வருகின்றனா். எனவே ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இடையே 1 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும். கடை உரிமையாளா்கள் விற்பனை நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை காவல் துணை ஆணையா் காா்த்திக் வழங்கினா். மாட்டுத்தாவணி, பரவை காய்கனிச் சந்தையில் உள்ள கடை உரிமையாளா்கள், நெல்பேட்டை பகுதியில் மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT